Friday, 23 March 2018

முல்லைத்தீவில் காணாமல் போன படகு இந்தியாவில் மீட்பு!!


கடல் சீற்றதால் முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல் போன படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் கரையொதுங்கியுள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 12 ஆம் திகதி முல்லைத்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றதால் காணாமல் போன மில்ராஜ், இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகு, தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.

படகில் மீனவர்களோ அல்லது மீன் பிடி சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன்!!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள் சங்கீதா தனது அப்பாவை மன்னித்து விடுதலை செய்யுமாறு மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிகாவுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அன்புடன் சத்துரிகா அக்காவுக்கு!

அம்மாவையும் இழந்து அப்பாவையும் பிரிந்து நானும் அண்ணாவும் அநாதையாய் இருக்கின்றோம். நான் அம்மாவின் வயிற்றில் இருந்த போதே அப்பா கைது செய்யப்பட்டார். எனக்கு இன்று எனக்கு பத்து வயது இதுவரைக்கும் அப்பாவுடன் பாசமாக பழகியது இல்லை. அம்மாவின் செத்தவீட்டில் தான் அப்பாவின் மடியில் இருக்க கிடைத்தது. அதுவும் கொஞ்சநேரமே.

அம்மா இல்லாத இந்த வீட்டில் நானும் அண்ணாவும் அப்பாவுடன் இருக்க ஆசையாய் இருக்கு. அக்கா உங்களுக்குத் தெரியும் அப்பாவின் பாசமும் அருமையும். நீங்கள் கருணை வைத்து உங்கட அப்பாவுக்கு கொஞ்சம் சொல்லி எங்கட அப்பாவை மன்னித்து விடச்சொல்லுங்கோ.

அக்கா நான் இப்ப கடவுளை விட உங்கட அப்பாவைதான் நம்புறன் ஏனென்றால் இந்த உலகத்தில் அவரால் மட்டும் தான் எங்கட அப்பாவை விடுவிக்க முடியும். இது நடக்க நீங்களும் உங்கட அப்பாவிடம் சொல்லுங்கோ. அன்புள்ள அக்கா அம்மாவும் அப்பாவும் இல்லாத இந்த வீட்டில் எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை.

அக்கா என்னை உங்கள் தங்கையாக நினைத்து எனது அப்பாவை விடுதலை செய்ய நீங்களும் உதவுங்கள்.

நன்றி
இப்படிக்கு
சங்கீதா

இலங்கையில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 78 ஆவது தேசிய தினம்

இலங்கையில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகரகத்தில் பாகிஸ்தானின் 78 ஆவது தேசியதினம் பதில் உயர்ஸ்தானிகர்  ஜான் பாஸ் கான் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தங்களது தாய்நாட்டினை  துடிப்புமிக்கதாகவும், முன்னேற்றமுடையதாகவும், ஜனநாயக நலன்புரி அரசாக வலிமைபெறச்செய்வதற்கான உறுதிமொழிகளுடன் கொண்டாடப்பட்ட தேசிய தினத்தில் இலங்கை வாழ் பாகிஸ்தானிய பிரஜைகள் பலர் கலந்துகொண்டனர்.
பாகிஸ்தானின் தேசிய கொடியை பதில் உயர் ஸ்தானிகர்  ஜான் பாஸ் கான்  தற்காலிக உயர் ஸ்தானிகரால் ஏற்றிவைக்கப்பட்டது. 1940 ஆண்டு வரலாற்றுமிக்க “லாஹிர் தீர்மானத்தினை” நிறைவேற்றி அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் பாகிஸ்தான் என்ற தேசம் உருவாகுவதற்கு வழிவகுத்த துணைக்கண்டத்தின் முஸ்லிம்களின் மேன்மையான சாதனையினை நினைவுகூறுமுகமாக  பாகிஸ்தானின் தேசிய தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 23 திகதி  கொண்டாடப்படுகின்றது.இந்நிகழ்வில்  இலங்கை பாகிஸ்தான் நட்புறவு, வர்த்தக மற்றும் முதலீட்டு சங்கத்தின் அங்கத்தவர்கள், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் அங்கத்தவர்கள், இலங்கைவாழ் பாகிஸ்தானிய பிரஜைகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நான்கு விடயதானங்களை மையப்படுத்தி பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் : ஜனாதிபதியின் விஜயத்தில் கைச்சாத்திடப்படும்

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இரு தரப்பு ஒப்பந்தங்களில் இன்று கைச்சாத்திட உள்ளார். 

பாக்கிஸ்தானின் 78வது குடியரசு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால அங்கு சென்றுள்ள நிலையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார். 

தேசிய பாதுகாப்பு கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. 

இலங்கை தேசிய பாதுகாப்பு கல்வியல் நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத் உபாய முறைகள் கல்வியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. 


மேலும் அரச சேவையாளர்களின் தரத்தினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் மற்றுமொரு ஒப்பந்தத்தை பாகிஸ்தானின் அரச கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட உள்ளது.

அத்துடன் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான துறைகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்பட உள்ளது. 

இலங்கையின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பாகிஸ்தானின் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான சர்வதேச நிலையம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. 

அதே போன்று இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட உள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர சேவைகள் , பயிற்சிகள் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பில் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. 


இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவைகள் அகடமி ஆகியவற்றுக்கு இடையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.

புதிய முதலீடுகள் மற்றும் இருதரப்ப உறவுகள் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்களுடன் இதன் போது ஜனாதிபதி பரந்தளவில் கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Thursday, 22 March 2018

அமெரிக்காவில் தேர்தலில் போட்டியிடும் தமி

அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்பெண் இம்முறை போட்டியிடுகிறார்.
கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின கொள்கைப்பிரிவு பணிப்பாளராக பணியாற்றினார்
கிரிஷாந்தி விக்னராஜா இலங்கையில் இருந்து 9 மாத குழந்தையாக அமெரிக்காவில் தமது பெற்றோருடன் குடியேறினார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இம்முறை அவர் போட்டியிடுகிறார்.
நான் ஒரு தாய், நான் ஒரு பெண், நான் உங்களின் அடுத்த ஆளுநராக வரவேண்டும். என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மேரிலேன்ட்டின் வாக்காளர்கள் இம்முறை பெண் ஒருவரை ஆளுநராக தெரிவுசெய்யவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார

Tuesday, 20 March 2018

ஐ.எஸ் முக்கிய தளபதியை நள்ளிரவில் சுட்டுக் கொன்ற பிரித்தானியா வீரர்


ஐஎஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவரை பிரித்தானிய வீரர் சுட்டுக் கொன்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி அஹமூதியா ஷபாரிய ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதனால் அப்பகுதிம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. சுமார் 1,500 மீற்றருக்கு அப்பால் இருந்து பிரித்தானியாவின் எஸ்ஏஸ் ஸ்னைப்பர் வீரர்கள் கண்காணித்து வந்தனர்.அப்போது அஹமூதியா ஷபாரிய ஒரு ஜன்னல் ஓரத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நின்றுள்ளார். இதைக் கண்ட பிரித்தானியா வீரர் சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்து அஹமூதியா ஷபாரியவை சுட்டுக் கொன்றார்.

இப்படி குறி தப்பால் சுட்டுத் தள்ளிய பிரித்தானியா வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், பாதுக்காப்பு நடவடிக்கையின் காரணமாக அவரது பெயர் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 18 March 2018

மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகள், செயற்பாடுகளால் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் - ஜனாதிபதி

பண்புமிக்க உயர் பெறுமதியுள்ள அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக மக்கள் பிரதிநிதிகள் தமது நடத்தைகளாலும் செயற்பாடுகளாலும் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த கால அட்டவணைக்கேற்ப மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு தமது உயரிய பங்களிப்பினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதன்போது பொதுமக்களுடன் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளாது கொள்கைகளுக்கு உட்பட்டு பொறுமையாகவும் அவதானத்தோடும் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

பொதுமக்களின் குரலுக்கு செவிசாய்த்து அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளும் செயற்பாடுகளில் ஊழல் மோசடியற்று செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளினால் பின்னடைவிற்கு உட்படாது, குறைபாடுகளை நிவர்த்திசெய்து சரியான, வலுவான அரசியல் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்நோக்கி கொண்டுசெல்ல இந்த பிரதிநிதிகள் கட்சிக்கு வலுசேர்ப்பார்கள் என்று ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.


உள்ளூராட்சி மன்ற சபை அமர்வுகளில் இயன்றளவு கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து, மக்களின் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு வேண்டுகோள் விடுத்த ஜனாதிபதி, புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களினூடாக தொடர்ச்சியாக அறிவைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்குமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியதுடன் அதனூடாக சிறந்தவொரு அரசியல் எதிர்காலத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.பிரதேசத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கி, அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பீடு செய்து, தேவையாயின் மேலும் நிதி வழங்க தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி வழங்கினார்.

ஜனாதிபதி, உள்ளிட்ட கட்சித் தலைவர்களின் முன்னிலையில் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் தூய்மையான அரசியல் இயக்கத்தில் உண்மையாகவும் அர்ப்பணிப்புடனும் ஈடுபடுவதாக உறுதிமொழி வழங்கினர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, பைஸர் முஸ்தபா, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்தனர்.

ஆளுநர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர்கள், மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெரும்தொகையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.Saturday, 17 March 2018

மன்னாரில் கிணற்றில் விழ்ந்து உயிரிழந்த சிறுவன்

மன்னார் காக்கேயன் குளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புறம் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றிரவு நடந்துள்ளது.
5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு சிறுவர்களும் கால்நடை ஒன்றை துரத்திச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்தனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இலட்சக்கணக்கான இலங்கையிர் ஆபத்தில்

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் கடந்த காலங்களில் VPN தளத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தியுள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார தெரிவித்துள்ளார்.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் தரவுகளுக்கமைய எட்டு இலட்சத்து 80 ஆயிரம் பேர் இவ்வாறு VPN பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு VPN பயன்படுத்தியமையினால் அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் பாதுகாப்பற்ற நிலைக்குள்ளாகியுள்ளதாக அசேல தெரிவித்துள்ளார்.
மேலும் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் உடனடியாக கையடக்க தொலைபேசிகளில் உள்ள VPN செயலியை (App) அழித்து விடுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Friday, 16 March 2018

முன்னாள் போராளி எல்லாளனின் கீறல் - 21

பாகம் – 21

வணக்கம், நேசமுடன் அன்புறவுகளே ....
இது எல்லாளனின் பசுமைப் பதிவின் இருபத்தியோராவது கீறல் ...

தவிர்க்க முடியாத புறச்சூழலின் இடை மறிப்புகளினாலேயே சென்றவாரம் என்னால் கீற முடியாது போய்விட்டது உறவுகளே,

ஒவ்வொரு வாரமும் என் மண்ணின் போராட்ட வரலாற்றினை பின்னோக்கி - அதனை நினைவில் இருத்தி வார்த்தைகளைக் கோர்க்கும்போது உண்மையில் நான் அந்த உன்னதமான தியாக சீலர்களின் ஒளிக் கதிர் வீச்சில் வெந்து போய்விடுகின்றேன்.

அப்பழுக்கற்ற அந்த தியாகமும் - ஈகமும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பிறக்கும் ஒவ்வொரு தமிழனின் தேகமெங்கும் நெருப்பாக அனலடிக்கும் ...இது சத்தியம் ..!!

முஸ்லீம்கள் தாக்கப்படுகின்றார்கள் - பாதிக்கப்படுகின்றார்கள் என்று என்னமாய் நம் அரசியல்வாதிகள் கண்ணீர் வடிக்கின்றார்கள். என் இனம் கருவோடு அறுக்கப்பட்டபோது காலியான திண்ணைக்கு பின்னங்கால் பிடறியில் அடிபட விழுந்தடித்து ஓடிவந்தவர்களே இன்றைய முதலைக் கண்ணீருக்கு சொந்தக்காரர்கள்.

ஒரு போராளிப் புலிவீரனுக்கு இருந்த இனப்பற்றும் - விலைபோகாத் தன்மையும் இந்த 'அட்டைக்கத்தி' வீரர்களில் ஒருவருக்காவது இருக்கின்றதா ?.. அப்படியிந்தால் எனக்குக் காட்டுங்கள், அதன் பின் நான் இந்த கீறல்களை அவர்களின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு என் எழுத்துக்களுக்கு மங்களம் பாடிவிடுகின்றேன்...
***

இக் கீறலில்,
உடும்பன்குள படுகொலையை நினைவேந்தி செல்லலாம் என நினைக்கிறேன்.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உடும்பன்குளம் கிராமத்தில் 19.02.1986 அன்று பாரிய படுகொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றது. நெல் வயல்களில் வேளாண்மையில் (சூடடிப்பில்) ஈடுபட்டிருந்தோர் மீது திடீரென அங்கு வந்த இலங்கைப் படையினர் வானை நோக்கிச் சுட ஆரம்பித்தனர். அதன் பின்னர், அங்கிருந்த மக்கள்மீது ரவைகள் பாயத்தொடங்கியது. இவர்களின் உடல்கள் அங்கிருந்த வைக்கோல் குவியல்களுடன் போடப்பட்டு எரிக்கப்பட்டன. பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் விவசாயமான அறுவடையினை ஆரம்பித்தபோது அந்த பிரதேசத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் பல கிராமங்களில் இருந்து தொழிலாளர்கள் அறுவடைக்கென்று தொழில் தேடி வந்து நெல் அறுவடையும் சூடுமிதிப்பும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்வேளையில் படையினர் கவசவாகனம் கொண்டு வயல் நிலத்தை சுற்றி வளைத்து வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள் சிறுவர்கள் உட்பட 104 பேரை சுட்டு வைக்கோலில் போட்டு தீக்கிரையாக்கினர்.

1983  இனக்கலவரத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் வாழும் பிரதேசத்தில் நடந்த முதல் பாரிய உயிர் இழப்புக்களை ஏற்படுத்திய சம்பவம் இதுவாகும்.
***

எனது வாராந்த கீறலுக்குள் காலடி எடுத்து வைக்கிறேன்...

டெலோ மோதல் முடிவுற்றதும் மட்டக்களப்பில் இலங்கை படையினருக்கு எதிரான தாக்குதலுக்கு திட்டமிட்டார் குமரப்பா. அந்த இலக்கு மாங்கேணி சிறீலங்கா இராணுவ முகாம். இத் தாக்குதலை நடத்துவதற்கு அன்றைய மாவட்ட தாக்குதல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த ஜிம்கலி குடும்பி மலைப் பிரதேசத்தில் அவர் அமைத்திருந்த முகாமில் ஒழுங்குகளை செய்துகொண்டு இருந்தார். தாக்குதலுக்கான அணிகளும் ஏனைய இடங்களில் இருந்து ஒன்று சேர்ந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தான் புலிகள் பாரிய இழப்பொன்றை மட்டக்களப்பு பிரதேசத்தில் சந்தித்தனர்.

27.06.1986 அன்று அதிகாலையில் கப்டன்.ஜிம்கலி, லெப்.கஜன் அவர்கள் தங்கியிருந்த முகாம் இலங்கை இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டது. நீண்ட காலமாக வேவு பார்க்கப்பட்டு மிகவும் நேர்த்தியாகத் திட்டமிட்டு இப் பாரிய தாக்குதலை இலங்கை இராணுவத்தினர் மேற் கொண்டிருந்ததாக பின்பு அறியப்பட்டது. காலை இரண்டு குண்டு வீச்சு விமானங்கள், உலங்கு வானுர்தி என தாக்குதலுக்கு மேலதிக பாதுகாப்பைக் கொடுத்ததாக அந் நடவடிக்கை அமைந்திருந்தது. இம் முகாமுக்கு குறிப்பட்ட தூரத்தில் தங்கியிருந்த தளபதி - லெப்.கேணல் குமரப்பா, கப்டன்.ஜிம்கலி அவர்களுடன் தொடர்பை எடுப்பதற்கு முயன்று முடியாததால் போராளி கங்கா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல் பற்றியதை அறிந்து கொண்டு, அவர்களை அதிலிருந்து பாதுகாப்பாக மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கேற்ப குறிப்பிட்ட சிலபோராளிகளை குழுவாக(Counter attack teams) ஒரு பக்கம் அனுப்பிவைத்து, இன்னொரு பக்கம் முற்றுகையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினருடன் அவர்களும் சண்டையில் ஈடுபட்டனர். இவருடன் சேர்த்து மேஜர்.ரூபன், கப்டன்.தரன் ஆகிய குழுவினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் இலங்கை இராணுவத்தினர் சிதறி ஓடினர். இதன் பின்பு முகாமுக்குள் நுழைந்து தேடிய போதுதான் கப்டன்.ஜிம்கலியின் வித்துடல் (Counter attack செய்யச் சென்ற குழுவால்) கைப்பற்றப்பட்டது.
கப்டன்.ஜிம்கலி, லெப்.கஜன், வீரவேங்கை சிந்து (சித்திரவேல் ஜெயாஜ் - கிரான்), வீரவேங்கை.சரவணன் (பிள்ளையான் சௌவுந்தரராஜன் - கிரான்), வீரவேங்கை கங்கா (நாகலிங்கம் கங்காதரன் - கிரான்), வீரவேங்கை குமார் (வில்லியம் அருள்நாதன் - ஏறாவூர்), வீரவேங்கை லோகேஷ் (நவரத்தினம் லோகேந்திரராஜா - முறக்கொட்டன்சேனை), வீரவேங்கை ரவி (பொன்னையா தருமராஜா - கறுவாக்கேணி, வாழைச்சேனை), வீரவேங்கை சைமன் (மயில்வாகானம் மாதவன் - கிரான்), வீரவேங்கை ரொஷான் (ஐயாத்துரை அமிர்தநாதன் - மயிலியதனை யாழ்ப்பாணம்) ஆகிய பத்து போராளிகள் வீரச்சாவடைந்தது தெரிய வந்தது.

ஜிம்கலி தன்வசம் வைத்திருந்த கைத்துப்பாக்கி அவருடன் இருக்கவில்லை. இவ் ஆயுதம் இலங்கை இராணுவத்தினரால் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று அப்போது உறுதி செய்யப்பட்டது. ஆனால் இவ்விடத்தில் சில ஆண்டுகளின் பின்பு (1990ஆம் ஆண்டு) ஒரு மரப் பொந்துக்குள் மறைத்து வைக்கபட்டிருந்ததை அங்கு வாழ்ந்த மக்களில் ஒருவர் கண்டெடுத்து போராளிகளிடம் ஒப்படைத்தார். இது ஜிம்கலி வைத்திருந்தது என தெரியவந்தது. தனது உயிரை விட தமிழ் மக்களைப் பாதுகாக்கின்ற ஆயுதம் மேலானது என்ற உணர்வு கப்டன்.ஜிம்கலியிடம் இருந்ததை எம்மால் உணரமுடிந்தது. அக் காலங்களில் ஒவ்வொரு போராளியும் ஆயுதத்தைப் பாதுகாப்பதற்கு தமது உயிரை அர்பணித்தார்கள் என்பதை எமது போராட்ட வரலாறுகளின் மூலம் அறிந்திருக்கின்றோம்.
***

கப்டன். ஜிம்கலி பற்றி ஒரு பார்வை...
மூத்த போராளி யோகண்ணன் (பாதர்) மூலம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த இவர், இந்தியாவில் முதலாவது பயிற்சி முகாமில் தனது பயிற்சியை பெற்றார். மற்றும், தமிழ் நாட்டில் நடாத்தப்பட்ட மூன்றாவது பயிற்சி முகாமில் உதவியாளர்களில் ஒருவராக பணியாற்றினார்.
அதன் பின் தாய் மண் திரும்பிய வேளையில், யாழ்ப்பாண ஸ்ரீலங்கா காவல் நிலைய அழிப்பு தாக்குதல்களிலும்  ஈடுபட்டார். மட்டக்களப்பு நோக்கி வருகிற வழியில் வன்னிப் பெருநிலப்பரப்பில் பல நடவடிக்கைகளில் போராளிகளுடன் இணைந்து செயலாற்றினார். முல்லைத்தீவின் கொக்கிளாய் என்ற இடத்தில் அமைந்திருந்த சிங்கள இராணுவ முகாம் மீதான தாக்குதலில் ஈடுபட்டு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப் பட்ட முதல் இலங்கை இராணுவ முகாம் மீதான தாக்குதல் என்ற வரலாற்று பதிவிலும் இடம்பெற்றார். திருகோணாமலை மாவட்டத்தில் குச்சவெளி என்ற இடத்தில் அமைக்கப் பட்டிருந்த இலங்கைக் காவல் நிலையம் மீதான தாக் குதலிலும் கப்டன் ஜிம்கலி பங்கேற்றுக் கொண்டார்.

02.09.1985 ஆம் ஆண்டு அன்று இத் தாக்குதல் நடந்த வேளையில் இலங்கை அதிரடிப்படையினர், கல்லடி, கும்புறுமுலை ஆகிய இடங்களில் நிலை கொண்டிருந்தனர். இத் தாக்குதல் நடக்கின்றபோது ஏறாவூர் இலங்கை காவல் துறையினருக்கு உதவிக்கு வரவிருக்கும் கும்புறுமூலையில் நிலை கொண்டிருந்த இலங்கை அதிரடிப்படையினரை தடுத்து தாக்கும்பணி கப்டன்.ஜிம்கலி தலைமையிலான குழுவினருக்கு கொடுக்கப் பட்டிருந்தது. கப்டன்.ஜிம்கலி குழுவினரின் தீவிர தாக்குதலால் நிலை குலைந்த இலங்கை அதிரடிப்படையினர் முகாமுக்கு திரும்பி  ஓடினார்கள். அன்றிலிருந்து கப்டன்.ஜிம்கலி கும்புறுமூலை அதிரடிப் படையினருக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகின்ற ஒரு வீரனாகக் காணப்பட்டார்.
மாவட்டத்தின் இரண்டாவது பயிற்சிப் பாசறையை பள்ளத்துச்சேனை என்ற வயல்சார்ந்த ஊரில் தனது மேற்பார்வையில் திறம்பட நடத்தினார்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட தளபதியாக லெப்.கேணல் குமரப்பா பொறுப்பேற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, தாக்குதல் பிரிவுப் பொறுப்பாளராக இவர் நியமிக்கப் பட்டிருந்தார்.
கப்டன்.ஜிம்கலி அவர்களின் திட்டமிடலிலும், தலைமையிலும் வாகனேரி என்ற ஊரில் 1986 ஆம் ஆண்டு ஒரு கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டும், பல இராணுவத்தினர் காயமடைந்தனர்.
***

லெப்.கஜன் (மொட்டைக் கஜன்) பற்றி...
அழகரத்தினம் மணிவண்ணன் மட்டக்களப்பு நகரத்தின் மத்தியபகுதியில் புளியந்தீவு என்னுமிடத்தில் 19.06.1960 அன்று பிறந்தார்.
இத் தீவில் அரசியலோடு இணைந்ததாக தீவிரமாக பல இளைஞர்கள் செயல்பட்டபோதும் போராளியாக களமிறங்கியவர்களில் ஒருவரும் இத்தீவில் முதல் மாவீரராக வரலாற்றில் பதிவானவரும் லெப்.கஜன் (அழகரத்தினம் மணிவண்ணன்) என்றே எமக்கு எடுத்துக் கூறக்கூடியதாக இருக்கின்றது.

1983 இல் ஏற்பட்ட இன அழிப்பை தொடர்ந்து  மட்டக்களப்பில் பல இடங்களிலிருந்து தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைவை ஏற்படுத்தினர்.

இவ்வாறு சில இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் “கிழக்கின் குழு” இக் குழுவில் லெப்.கஜன், லெப்.பயஸ், கப்டன்.முத்துசாமி, லெப்.ஈசன், லெப்.உமாராம் உட்பட பலர் இணைந்திருந்தனர். இக் குழுவினர் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முதல் நடவடிக்கையொன்றை திட்டமிட்டனர்.
புளியந்தீவில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட கோட்டையினுள் மாவட்ட செயலகம் இயங்குகின்றது இச் செயலகத்தினுள் ஒரு மறைவிட அறையில் பல வேட்டைத்துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அறிந்த இக்குழுவினர், மிகவும் சிறந்த முறையில் திட்டமிட்டு அனைத்து துப்பாக்கிகளையும் அங்கிருந்து கைப்பற்றினர்.

இச் செயலில் லெப்.கஜன் அவர்களின் பங்கு முக்கியமாகவிருந்தது. அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்ட பெருந்தெருக்கள் திணைக்களத்தின் களஞ்சிய அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வெடிக்க வைக்கும் சாதனம் (Exploder) ஒன்றையும் எடுத்தனர்.

இதன் பின்னர், இக் குழுவினர் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின், இந்தியாவில் நடந்த மூன்றாவது முகாமில் லெப்.கஜன் பயிற்சி பெற்றார்.

தளபதி கேணல்.கிட்டு அவர்களின் திட்டமிடலிலும், கட்டளையிலும் தகர்க்கப்பட்ட யாழ் இலங்கை காவல் நிலைய அழிப்பிலும் லெப்.கஜன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

யாழிலிருந்து மட்டு நோக்கிய வரவின்போது திருகோணமலை, குச்சவெளி என்னும் இடத்தில் அமைக்கப் பட்டிருந்த பொலிஸ் நிலையம் மீதான தகர்ப்பும், கடற்படையினரின் தாக்குதலிலும் இவர் பங்கு கொண்டார்.

லெப்.கஜன் மூதூரில் தங்கியிருந்த காலத்தில் மூதூர் தளபதி கணேஷ் அவர்களின் திட்டமிடலில்  ‘பட்டித்திடல்’ என்ற ஊரில் நடந்த கண்ணி வெடித் தாக்குதலை வெற்றிகரமாக செய்தார். இத் தாக்குதலில் படையினரிடமிருந்து போராட்ட வரலாற்றில் கனரக ஆயுதமான 303 L.M.G பெற்றுக் கொண்டதற்கு காரணமாகவிருந்த லெப்.கஜன் பாராட்டுக்குரியவரானார்.

காயன்கேணி என்னுமிடத்தில் வைத்து 17.08.1985 அன்று குமரப்பா தலைமையில் நடந்த இத் தாக்குதலில் லெப்.கஜன் கண்ணிவெடி வெடிக்கச் செய்து தாக்குதலை ஆரம்பித்து வைத்தார்.
02.09.1985 அன்று நடந்த ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதலிலும் முக்கிய பங்கேற்றார்.
லெப்.கஜன் மாங்கேணி இராணுவ முகாம் தாக்குதலுக்கு செல்லும் வழியில், புலிபாய்ந்தகல் என்னும் ஊருக்கருகாமையில் கோராவெளி என்னும் ஊரில் கப்டன்.ஜிம்கலி அவர்களின் பொறுப்பில் இருந்த விடுதலைப் புலிகளின் மறைவிட முகாமில் தங்கியிருந்த வேளையில் 27.06.1986 அன்று அதிகாலையில் சிங்கள இராணுவத்தினரின் சுற்றி வளைப்புத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

இவருக்கு வழங்கப்பட்ட தரம் (Rank) பற்றி பலரும் பல விதமாக பேசினார்கள். கப்டன்.கஜன் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த உயர்ந்த போராளிக்கு அப்போதைய தளபதி குமரப்பா, லெப்டினன்ட் தரம் வழங்கி இருந்தார். மட்டு போராளிகளுக்கும், மக்களுக்கும் இது புரியாத புதிராகவே அமைந்தது!

இவருடைய தாயார் ஜீவானந்தம் அழகரத்தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியராக பணியாற்றியிருந்தார்.

இவர் 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் விசேட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மீண்டும்  கீறல் 22 இல் இணைவோம்...

தலைப்­பிறை பார்க்கும் மாநாடு


புனித றஜப் மாதத்­திற்­கான தலைப்­பிறைப் பற்றி தீர்­மா­னிக்கும் மாநாடு எதிர்­வரும் 18ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசலில் இடம்­பெ­ற­வுள்­ள­தாக கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் பொதுச் செய­லாளர் எம்.தெளபிக் சுபைர் தெரி­வித்தார்.

மெள­லவி ஜே.அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள இந்­நி­கழ்வில் கொழும்பு பெரிய பள்ளி வாசலின் நிரு­வா­கிகள், அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா சபையின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன், ஹனபி பள்­ளி­வா­சல்­களின் நிரு­வா­கிகள் ஆகியோர் கலந்­து­கொள்வர்.

இம்­மா­நாட்‍டில் தலைப்­பிறை பற்றி எடுக்­கப்­படும் தீர்­மானம் இலங்கை ஒலி­ப­ரப்புக் கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை ஊடா­கவும் ஏனைய ஊட­கங்கள் மூல­மா­கவும் நாட்டு மக்­க­ளுக்கு மாநாட்டின் தலை­வ­ரினால் அறி­விக்­கப்­படும். 

தலைப்­பிறை சம்­பந்­த­மாக ஊர்­ஜி­த­மற்ற தக­வல்­க­ளையோ வதந்­தி­க­ளையோ மக்­க­ளுக்கு பகிர்­வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!


ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க  வீரதுங்கவை இன்டர்போல் ஊடாக கைது செய்யும் பகிரங்க பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார்.

Wednesday, 14 March 2018

இருதரப்பு தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு ஜப்பான் பிரதமர் - இலங்கை ஜனாதிபதி உறுதி


இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் முயற்சிப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான சுகாதார சேவை ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்தார்.

ஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றபோதே ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.அத்துடன் ஜப்பான் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் வழங்கப்படும் என ஜப்பானிய பிரதமர் உறுதியளித்தார்.

இதன்போது துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமையளிப்பதுடன், ஏற்கனவே கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


இலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்த ஜப்பானிய பிரதமர், அதிவேக வீதிக்கட்டமைப்புக்களின் நிர்மாணத்திற்கும் உதவி வழங்குவதாக இதன்போது குறிப்பிட்டார்.

ஜப்பானின் விசேட கைத்தொழில் செயற்பாடுகளின் பங்களிப்பையும் இலங்கைக்கு வழங்க முடியும் என ஜப்பானிய பிரதமர் இதன்போது தெரிவித்தார். 

அதேபோன்று இலங்கையின் சுகாதார துறையின் அபிவிருத்திக்கு அவசியமான தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு ஜப்பானிய பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

இலங்கையின் இடர்முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும், கழிவுப்பொருள் முகாமைத்துவ செயற்திட்டத்திற்கும் உதவி வழங்குவதாக ஜப்பானிய பிரதமர் உறுதி அளித்தார்.

பாதுகாப்பு மற்றும் கடற்படை செயற்பாடுகளிலும் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை இதன்போது நினைவுகூர்ந்த ஜப்பானிய பிரதமர், இந்து சமுத்திர வலய நாடுகளிடையே ஜப்பானிய அரசாங்கத்தின் இந்த உதவி இலங்கைக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இது தொடர்பாக ஜப்பானிய பிரதமருக்கு விசேடமாக நன்றி தெரிவித்தார்.

இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இலங்கையில் அரசதுறையில் முதலீடு செய்தல் மட்டுமல்லாது, அரச மற்றும் தனியார் ஆகிய இருதுறைகளினதும் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜப்பானிய பிரதமர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயத்தினால் இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் ஆதிகாலம் முதல் பேணப்பட்டுவரும் நெருங்கிய நட்புறவில் மேலும் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

இருநாடுகளுக்குமிடையே இருதரப்பு தொடர்புகளை மேலும் உறுதிசெய்து கொள்வதற்கு அரச முறை விஜயமொன்றினை விடுத்தமைக்காக ஜப்பானிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஜீ7 மாநாட்டின்போது வலுப்பெற்ற ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதியடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

அத்தடன் கடந்த ஜீ7 மாநாட்டின் வெற்றியை நினைவூட்டிய ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமருக்கு அதற்காக நன்றி தெரிவித்தார்.

நேற்றைய தினம் அகிஹிதோ சக்கரவர்த்தியுடன் இடம்பெற்ற சந்திப்பினை கௌரவத்தோடு நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதன்போது தமக்கு வழங்கப்பட்ட அமோக வரவேற்பிற்கும் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தருமாறு ஜப்பானிய பிரதமருக்கு ஜனாதிபதி, அழைப்பு விடுத்ததுடன் ஜப்பானிய பிரதமரும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

இரு அரச தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் இறுதியில் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான சுகாதார சேவைகள் தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பானிய பிரதமரின் அலுவலகத்திற்கு விஜயம்செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு  ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபே, மகத்தான வரவேற்பு அளித்தார்.

அதன் பின்னர் இராணுவ அணிவகுப்பு மரியாதை சகிதம் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு மிகுந்த அபிமானத்தோடு இடம்பெற்றமையானது இருநாடுகளுக்குமிடையிலான தொடர்பினை தெளிவாக எடுத்துக் காட்டியது.

உத்தியோகபூர்வ வரவேற்பின் இறுதியில் இரு அரச தலைவர்களும் சுமூக கலந்துரையடலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் ஜப்பானிய பிரதமரினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதான கலந்துரையாடல் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அரச தலைவர்களின் குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது.

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீது தாக்குதல் ; விசாரணையில் வெளியானது அதிர்ச்சித் தகவல்

ஆனமடுவ முஸ்லிம் ஹோட்டல் மீதான பெற்றோல் குண்டுத் தாக்குதல், மிகத் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட சம்பவம் எனவும் இது தொடர்பில் தாக்குதலுக்கு முன்தினம் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணையாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த பெற்றோல் குண்டுத்தககுதலுக்கு முன்னைய தினம் த.மு.தஸநாயக்க விளையாட்டு மைதானத்தில் இரவோடிரவாக 20 இற்கும் அதிகமான இளைஞர்கள் ஒன்றுகூடி, இந்த தாக்குதலை திட்டமிட்டமை தொடர்பில் விசாரணை அதிகாரிகள் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அதன்பிரகாரம், சதித் திட்டம் தீட்டியோரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

 அதன்படி ஏற்கனவே இந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவன் ஒருவன் உள்ளிட்ட 7 பேருக்கும் எதிரான தண்டனை சட்டக் கோவையின் 131,140,419 ஆம் அத்தியாயங்களின் கீழும் 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3(1) ஆம் அத்தியாயத்தின் கீழும், 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர கால சட்டத்தின் 24(1), 12(1) ஆம் அத்தியாயங்களின் கீழும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படியே அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில்  மூன்று மோட்டார் சைக்கிள்களில் வருகை தந்துள்ள சந்தேக நபர்கள் இந்த ஹோட்டல் மீது தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர். 

முதலில் ஹோட்டலின் முன் பகுதியில் பெற்றோலை ஊற்றிவிட்டு பின்னர் பெற்றோல் குண்டுத்தாக்குதலை  நடாத்தியமை தொடர்பில் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டன. 

அத்துடன் தாக்குதலுக்கு வந்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  இந் நிலையில் தீக்கிரையான ஹோட்டலுக்கு அருகில் உள்ள மற்றொரு வர்த்தக நிலைய சி.சி.ரி.வி.கமராவில் இருந்த பதிவுகளை மையப்படுத்தி ஒரு சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவரிடம் முன்னெடுத்த விசாரணைகளில் ஏனையோரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 இதனிடையே ஆனமடுவ தககுதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களுக்கும் கண்டி வன்முறைகளுடனோ அதன் சூத்திரதாரிகளான மஹாசென் அமைப்பினருடனோ தொடர்புகள் உள்ளனவா எனவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.உலகின் முதல் 50 துறைமுகங்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 23 ஆவது இடம்


இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து  கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கை  இன்று கைச்சாத்திடப்பட்டது. உலகின் முதல் 50 துறைமுகங்களில் இலங்கை கொழும்பு துறைமுகம் 23 ஆம் இடத்தினை வகிக்கின்றது.

அதேபோல் கடந்த ஆண்டில் மாத்திரம் 6.1 மில்லியன் வருவாய் பெறப்பட்டுள்ளது என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். 

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அலுவல்கள் அமைச்சில் இன்று அரச- தனியார் இணைந்த துறைமுக அபிவிருத்தி செயற்பாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

கொழுப்பு துறைமுகத்தை அரச -தனியார் ஒத்துழைப்பில் கையாண்டு அதன் மூலம் வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை இலக்காக கொண்டதாக இந்த நிகழ்வில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்து செயற்படும் தனியார் துறைமுக நிறுவனங்கள் அனைத்தும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டன.  இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

டோக்கியோவிலுள்ள கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி

ஜப்பானுக்கு அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இன்று முற்பகல் டோக்கியோவில் உள்ள நவீன கழிவு முகாமைத்துவ நிலையத்தை பார்வையிட்டார்.சுமார் 9.3 மில்லியன் மக்கள் வாழும் டோக்கியோ நகரில் நாளாந்தம் 11 ஆயிரம் மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் வெளியேற்றப்படுவதுடன், இவற்றை முகாமைத்துவம் செய்வதற்காக இது போன்ற 23 மத்திய நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி, பார்வையிட்ட சினகாவாவில் உள்ள திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் சுமார் 60 மெற்றிக் தொன் திண்மக் கழிவுகள் நாளாந்தம் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சூழல் நட்புடைய வகையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், அந்த நடவடிக்கைகளை ஜனாதிபதி பார்வையிட்டார்.

கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு மேலதிக பெறுபேறாக உற்பத்தி செய்யப்படும் அனல்மின் மின்சக்தியாக மாற்றப்படுவதுடன், இந்த மின்சக்தி திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் பயன்பாட்டுக்காக பெற்றுக்கொள்ளப்படுவதுடன், எஞ்சிய தொகை தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.இலங்கையில் திண்மக் கழிவு பிரச்சினையை தீர்ப்பதற்கு இத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராயவுள்ளதாகவும், இதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தின் தலைவரினால் இந்த நிலையத்தின் பணிகள் குறித்து ஜனாதிபதி, உள்ளிட்ட குழுவினருக்கு விரிவாக விளக்கப்பட்டது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்ஹ ஆகியோரும் இந்கிழ்வில் கலந்துகொண்டனர்.Tuesday, 13 March 2018

முல்லைத்தீவில் காணாமல்போன மீனவர்கள்

முல்லைத்தீவில் தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவர்களை தேடுவதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சம்பவத்தில் சிலாபத்தினை சேர்ந்த மூன்று மீனவர்களே காணாமல்போயிருந்த நிலையில், நாயாற்றுப் பகுதி மீனவர்களால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மீனவர்கள் மூவரும் கடந்த 12ஆம் திகதி அதிகாலை முல்லைத்தீவு நாயாற்று பகுதியிலிருந்து படகில் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
சென்றவர்கள் 12ஆம் திகதி நண்பகல் வேளை கரை திரும்புவதாக தெரிவித்த போதும் அவர்கள் கரை திரும்பாத நிலையில் நேற்று காலை முதல் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கூறுகையில்,
சிலாபத்தினை சேர்ந்த 51 வயதான மில்ராஜ் மிரண்டா, 48 வயதான இமானுவேல் மிரண்டா, 24 வயதான மிதுறதன் மிரண்டா எனும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் சென்ற படகு சீரற்ற காலநிலை காரணமாக கடலில் மூழ்கி இருக்கலாம். இந்த நிலையில் எரிபொருள் நிரப்பும் கான் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
மேலும், காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு கடற்படைக்கு தகவல் வழங்கியும் அவர்கள் அக்கறையில்லாது செயற்படுகின்றனர்.
கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால் நேற்றைய தினம் கடலுக்கு சென்று தேடமுடியாத நிலை காணப்பட்டது. எம்மால் முடிந்தளவு தேடியும் எந்த ஒரு தடயத்தையும் காணவில்லை.
இந்த விடயத்தில் கடற்படை மற்றும் அரசு அக்கறையீனமாக செயற்பட்டு வருவதுடன், குறித்த மீனவர்களை கடற்படையினரை கொண்டு தேட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஊடாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் மூலம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் மீனவர்களை தேட விமானப்படையின் உதவியை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் மீன் விலையில் திடீர் மாற்றம்

யாழ்ப்பாணத்தில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பால் அனேகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியை தவிர்த்திருந்தனர்.
காற்றுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பால் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் தீவுப்பகுதி, வடமராட்சி போன்ற பிரதேசங்களில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை தவிர்த்துள்ளனர்.
அதிகமானோர் கரைவலை மூலமே மீன்பிடியில் ஈடுபட்டனர். இதனால் கட­லுணவின் வருகை குறைந்தும், விலை அதிகரித்தும் காணப்­படுகிறது.
வடமராட்சிப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாண நகருக்கு எடுத்து வரப்­பட்ட கடலுணவுகளின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டன.
அத்துடன் பாசையூர், குருநகர், கொட்டடி, நாவாந்துறை, கல்வியங்­காடு மீன் சந்தைகளில் கடலுணவுக­ளில் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கத

சோகத்தில் ஆழ்ந்த ஊர்

நிலாவெளி - பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து உயிரிழந்த ஐவரினதும் இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர் . மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தர்மலிங்கம் தங்கத்துறை (42வயது), டி.சங்கவி (10வயது), சுரேஷ் கேதிராஜ் (10வயது), சுரேஷ் யுதேஷன் (07வயது), சுதன் பிரனாவி (07வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றதுடன், உடலம் நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலிகளைத் தெரிவித்ததுடன், அனைத்து உடலங்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈ பி டி பி கட்சியினுள் பிளவு???

ஈ.பி.டி.பி கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக வெளியான செய்தியை வடமாகண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா மறுத்துள்ளார்.
ஈ.பி.டி.யில் இருந்து விலகி தவராசாவும், சந்திரகுமாரும் இணைந்து தனிக்கட்சியை ஆரம்பிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால், இந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று தவராசா கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சில ஊடகங்கள் இவாறான செய்திகளை திட்டமிட்டு வெளியிட்டு வருவதாகவும் வடமாகண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா குறிப்பிட்டுள்ளார்.

Monday, 12 March 2018

இலங்கை அரசிற்கு காத்திருக்கும் நெருக்கடி


நல்­லி­ணக்க நகர்­வு­களில் சர்­வ­தேசம் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரும் நிலையில் முஸ்­லிம்கள் மீதான அடக்­கு­முறை செயற்­பா­டுகள் மேலும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தும். இம்­முறை ஜெனி­வாவில் இதற்­கான பிர­தி­ப­லிப்­புகள் வெளிப்­படும் என கலா­நிதி ஜயம்­பதி விக்­ர­ம­ரத்ன தெரி­வித்தார். 

அர­சாங்கம் உட­ன­டி­யாக முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­களே பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வாக அமையும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

ஜெனிவா மனித உரி­மைகள் பேர­வையில் கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இலங்கை விவ­காரம் அடுத்த வாரம் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் நாட்டில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டிகள் கார­ண­மாக இலங்­கைக்கு ஏற்­படும் சவால்கள் குறித்து வின­வி­ய­போதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கலா­நிதி ஜயம்­பதி விக்­கி­ர­ம­ரத்ன இதனைக் குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில் 

ஆட்சி மாற்­றத்தின்  பின்னர் இலங்கை அர­சாங்­க­மாக நாம் நல்­லி­ணக்க நகர்­வுகள் குறித்து பல்­வேறு வாக்­கு­று­தி­களை கொடுத்­துள்ளோம். அதில் பிர­தா­ன­மா­னது புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வ­தாகும். அதேபோல் நாம் பல்­வேறு செயற்­பா­டு­களில் முன்­ன­கர்­வு­களை கையாண்­டுள்ளோம். காணிகள் விடு­விப்பு விட­யங்­களில் முன்­னேற்­றங்கள் காணப்­பட்­டுள்­ளன.  நாட்டில் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்கள் பலவும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. தகவல் அறியும் சட்­ட­மூலம் கொண்­டு­வந்­துள்­ளமை, தேர்தல் முறைமை மாற்­றங்கள் என்­ப­னவும் இதன் ஒரு பிர­தி­ப­லிப்­பாக கருத முடியும். எவ்­வாறு இருப்­பினும் நாம் இன்னும் முன்­னோக்கி பய­ணிக்க வேண்­டிய தேவை உள்­ளது. 

இம்­முறை ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் இலங்­கைக்கு நெருக்­க­டி­யாக சில விட­யங்கள் அமையும். குறிப்­பாக நாம் இன்னும் முன்­னெ­டுக்க வேண்­டிய சில நட­வ­டி­கை­களில் முன்­னேற்­றங்கள் இடம்­பெற வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­படும். எனினும் அண்மைக் கால­மாக நாட்டில் சிறு­பான்மை மக்கள் மீதான சில அடக்­க­முறை சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்ள நிலையில் இவை எமக்கு பாரிய நெருக்­க­டி­யினை ஏற்­ப­டுத்தும் என எதிர்­பார்க்க முடியும். இந்த சம்­ப­வங்கள் இப்­போதே சர்­வ­தேச ஊட­கங்­களில் விமர்­சிக்­கப்­பட்­டுள்­ளன. 

எனவே இவை தொடர்பில் கேள்வி எழுப்­பப்­ப­டலாம்.எனவே அர­சாங்­க­மாக நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய முக்­கிய நட­வ­டிக்­கை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். இந்த நாட்டில் சிறு­பான்மை மக்­களின் பாது­காப்பு உறு­தி­ப­டுத்­தப்­பட வேண்டும். இதில் ஒரு சிலர் தமது அர­சியல் சாத­கத்­தன்­மை­யினை கருத்தில் கொண்டு இன­வாத முரண்­பா­டு­களை தோற்­று­விக்க முயற்­சித்து வரு­கின்­றனர். ஆனால் அதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்கக் கூடாது. 

சிங்­கள மக்­க­ளுக்கு உள்ள அதே உரிமை அந்­தஸ்து இந்த நாட்டின் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் உள்ளது. ஆகவே அதனை நாம் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டும். அங்கீகரிக்கவும் வேண்டும். இனவாதம் மூலம் நாட்டில் ஒருபோதும் ஐக்கியத்தை உறுதிப்படுத்த முடியாது, ஆகவே விரைவில் தீர்வுகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் உள்ளது எனவும்  அவர் குறிப்பிட்டார்.  

“சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் பின்னடையும்”


சமூகவலைத்தளங்கள் முடக்கம் தொடர்பில் அரசாங்கம் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்ள வேணடும். அவ்வாறில்லையெனில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பாரிய எதிர்ப்பை அரசாங்கம் சந்திப்பதோடு நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக  பின்னடைவினை எதிர்கொள்ள வேண்டுமென அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர்களின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சுபாசன அபயவிக்ரம தெரிவித்துள்ளார். மாலபேவில் அமையப்பெற்றுள்ள அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர் உரிமைகள் அமைப்பின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமை தொடர்பில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.                   இந்த நிலையினால் சுமார் 60 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கு பிரதான காரணம் இவர்களின் பிரதான தொடர்பாடல் ஊடகங்களாக வைபர், வட்ஸ் அப் மற்றும் முகப்புத்தகம் போன்றன  காணப்படுகின்றன. 

நாட்டின் தேசிய தேவைகளுக்காக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுப்படுபவர்களின்  தொடர்பாடல் உரிமையை கைகொள்வது மற்றும் பாதிப்பை ஏற்படுத்துவது பாரிய  குற்றமாகும். 

இந்த சமூக வலைத்தளங்களினூடாகவேஇவர்களது உறவுகள் அனைத்தும் தொடர்புகொள்கின்றன. ஆனால் கடந்த சில நாட்களாக இவர்கள் அசௌகரிய நிலையினை சந்தித்துள்ளனர். 

சமூக வலைத்தளங்களை தவறான முறைகளில் பயன்படுத்துபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் தவறு செய்பவர்களை தண்டிப்பதற்கு பதிலாக இலட்சகனக்கான மக்களின் தேவையை தடைசெய்வது அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடாகும். 

அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தாவிட்டால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களால் தொடர்ச்சியான பாரிய எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படும்            அதே சந்தர்ப்பத்தில் வைபர் வலைத்தளத்தை பயன்படுத்தும் பிரதான ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒரு நாடாக காணப்படுகின்றது. 

இலங்கையில் 59 இலட்சம் மக்கள் முகப்பு  புத்தகத்தையும், 8 இலட்சம் மக்கள் கீச்சகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தொடர்ச்சியான இந்த சமூக வலைத்தளங்களின் முடக்கம் தொடருமானால் நாட்டின் பொருளாதாரம் தொடர் பின்னடைவினை எதிர்நோக்க வேண்டிய சூழல் தோற்றம் பெறும் என தெரிவித்தார்.   

இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ; 100 மில். அமெரிக்க டொலரை ஒதுக்கியது இந்தியா


இலங்கையில் சூரிய சக்தி தொழில்நுட்ப விருத்திக்கென இந்திய அரசு 100 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கியுள்ளது. கடந்த 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் சர்வதேச சூரிய சக்தி குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சூரிய சக்தி மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சர்வதேச ரீதியாக 46 நாடுகளை ஒன்றிணைத்த வகையில் இடம்பெற்ற இம்மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அபிவிருத்தி வங்கி தலைவர்கள், புதுப்பிக்கத்தக்க சக்திவள வர்த்தக தலைவர்கள், பொது அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

இம்மாநாட்டின் போது சூரிய சக்தி தொழில்நுட்ப  மாநாட்டு திட்டங்கள் அறிக்கை வடிவில் வெளியிடப்பட்டது. 

இந்தியாவின் நிதியுதவியின் கீழ் 15 நாடுகளுக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் சூரிய சக்தி தொழில்நுட்பம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. 

இதன்படி இலங்கைக்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்திற்கென 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன்மூலம் 200 ஆயிரம் வறிய குடும்பங்களுக்கான சூரிய சக்தி தொழில்நுட்பம் மற்றும் அரச பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் என்பவற்றிற்கான சூரிய சக்தி தொழில்நுட்பத்தை நிறுவுதல் என்பன இம்முதலீட்டின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இம்மாநாட்டின் போது இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடி சூரிய சக்தி திட்டத்தினால் பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஏற்பட்ட நேர்மறையான காலநிலை மாற்றத்தை நினைவு கூர்ந்தார். 

அனைத்து நாடுகளும் தமது சக்திவலு தேவையை நிறைவு செய்வதற்கான வாய்ப்பேற்படுத்தல், பொதுவான கட்டமைப்பு ஒன்றின் மூலமாக ஒன்றிணைந்து  செயற்படல், சூரிய சக்தி தொடர்பான தொழில்நுட்பத்தை விருத்தி செய்தல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக  கொண்டு சூரிய சக்தி மாநாடு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எச்சரிக்கையை மீறி சென்ற மீனவர்களுக்கு நடந்த கதி


முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்றைய தினம் இந்த மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், பங்கதெனிய பிரதேசங்களை சேர்ந்த 50, 48 மற்றும் 24 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படையின் உதவியுடன் காணாமல் போயுள்ள மீனவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மீட்க்கப்பட்ட விமானப்பாகங்கள்l

பாணந்துறை, அலுபோவத்தில பிரதேசத்தில் இருந்து விமானத்தின் பாகங்கள் சில பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் விமானப்படை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்தே இந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவை பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட விமானங்களின் பகுதிகள் என குறிப்பிடப்படுகின்றது.
மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிகிரியாக குகை தொடர்பான புதிய தகவல்

சீகிரிய வரலாறு தொடர்பில் முக்கிய பல தகவல்கள் தொல்பொருள் ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீகிரிய கற்களை மையமாக கொண்டு அதனை சுற்றி ஓடும் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட அகழ்விலேயே இந்த தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் வடிவியல் இயல்பினை சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அகழ்வு நடவடிக்யைின் போது அங்கு சிங்கத்தின் உருவம் ஒன்று கிடைத்ததாக மத்திய கலாச்சார நிதியத்தின் இயக்குனர் பிரிஷாந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த சிங்கத்தின் உருவத்தை அவதானிக்கும் போது, தற்போது சீகிரியாவில் அமைந்துள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த, உருவம் எந்த முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும்.
அத்துடன் அதன் கட்டடக்கலை மற்றும் கட்டமைப்பு கலை தொடர்பில் ஒரு முடிவுக்கு வர முடியும் என இயக்குனர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது உள்ள சிங்கத்தின் பாதத்தின் மேல் பகுதியில் உள்ள சிங்கத்தின் உருவத்திற்கு சில மர கலப்புடனான களிமண் கலவை கலந்து கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sunday, 11 March 2018

கண்டி கலவரத்தின் போது கூகிளின் உதவியை நாடிய கலகக்காரர்கள்

கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு சமூக வலைத்தளங்கள் நேரடியாக தாக்கம் செலுத்தியுள்ளதாக பல தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையில் காலவரையின்றி பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முஸ்லிம் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களின் போது சமூக வலைத்தளங்களுக்கு அப்பால் கூகுள் தேடுபொறியில் சிலவற்றைய தேடியுள்ளதாக Google Trends தரவுகள் உறுதி செய்துள்ளது.
அதற்கமைய அண்மையில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட மோதலில் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தயாரிப்பதற்கு அவசியமான தகவல்களை கூகுள் தேடு பொறி ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதியில் இருந்து 8ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் Google Trends தரவுகளை ஆய்வு செய்யும் போது இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோதலில் போது பெட்ரோல் குண்டுகளுடன் வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட நிலையில் அதனை தயாரிப்பதற்கான உதவிகளை கூகுள் மூலம் தேடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த நாட்களில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது பெருமளவு பெட்ரோல் குண்டுகள் மீட்கப்பட்டன.
வன்முறை சம்பவங்களின் போது நூற்றுக்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் தீ வைக்கப்பட்டன. இதற்காக பெற்றோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனை உறுதிப்படுத்தும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமூக வலையத்தளங்கள் தொடர்பாக விசேட பேச்சுவார்த்தை

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
சிங்கள ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, கடந்த 7ம் திகதி முதல் தொடர்ந்து இந்த தடை அமுலில் இருக்கிறது.
இதனை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில், இன்றையதினம் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்தவிடயம் குறித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது குறித்த தடையை நீக்குவதா? அல்லது இன்னும் சில தினங்களுக்கு தடையை நீடிப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோடியை சந்தித்தார் மைத்ரி


இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட ரூபா 80 இலட்சம் பணம் மாயம்!!


அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்துக்கு எடுத்து வரப்­பட்ட 80 இலட்­சம் ரூபா பணம் திரைப்­ப­டப் பாணி­யில் திரு­டப்­பட்­டது. அரச வங்கி ஒன்­றுக்­காக நேற்­று­முன்­தி­னம் வாக­னத்­தில் இர­க­சி­ய­மாக எடுத்து வரப்­பட்­ட­போதே பணம் காணா­மற்­போ­யுள்­ளது.

திருட்­டுத் தொடர்­பான சந்­தே­கத்­தில் பணத்தை எடுத்து வந்த வங்கி ஊழி­யர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குக் காவ­லுக்­குச் சென்ற ஒரு­வ­ரு­மாக நால்­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். பய­ணத்­தின் இடை­யில் தேநீர் குடிப்­ப­தற்­கா­கக் கடை ஒன்­றுக்­குள் சென்று திரும்­பு­வ­தற்­கி­டை­யில் பணம் காணா­மற்­போ­யி­ருந்­தது என்று இந்த நால்­வ­ரும் தமது வங்கி அதி­கா­ரி­க­ளி­டம் முறை­யிட்­டி­ருந்­த­னர். இது குறித்த விசா­ர­ணை­க­ளைக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுப் பொலி­ஸார் ஆரம்­பித்­துள்­ள­னர்.

வங்கி ஊழி­யர்­கள் மற்­றும் பாது­கா­வ­லரே பணத்­தைத் திரு­டி­விட்டு நாட­க­மா­டு­கி­றார்­கள் என்­கிற சந்­தே­கத்­தின் பேரி­லேயே பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டனர். எனி­னும் அவர்­க­ளி­டம் இருந்து இது­வ­ரை­யில் பணம் மீட்­கப்­ப­ட­வில்லை. விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன.

வங்­கித் தேவைக்கு அவ்­வப்­போது இப்­படி வாக­னத்­தில் பணம் எடுத்து வரப்­ப­டு­வது வழமை. அது­போன்றே அன்­றும் அநு­ரா­த­பு­ரத்­தில் இருந்து 80 லட்­சம் ரூபா பணத்­து­டன் வாக­னம் யாழ்ப்­பா­ணம் நோக்­கிப் புறப்­பட்­டது. வாக­னத்­தில் வங்­கிப் பணி­யா­ளர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குப் பாது­காப்­பாக ஆயு­தம் தாங்­கிய காவ­லர் ஒரு­வ­ரும் இருந்­த­னர்.

புத்தளத்தில் உணவகம் தீக்கிரை


புத்தளம் – ஆணைமடுவவில் உணவகம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

முஸ்லிம் வர்த்தகரின் மதீனா எனும் உணவகமே இவ்வாறு தீ்க்கிரையாக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் சேத விபரங்கள் குறித்து முழுமைான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பேருவளை தர்கா வீதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்கதல் மேற்கொள்ளப்பட்டது. எனவும் கூறப்பட்டது.

மாயமான முஸ்லிம் வர்த்தகர் கல்லடியில் சடலமாக மீட்பு!


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரிலிருந்து சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த வர்த்தகர் நேற்றுமாலை மாலை மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்று காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனங்களின் வர்த்தகரான ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது-35) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமைபோன்று சனிக்கிழமை இரவு தனது மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிற்சாலையிலிந்து வெளியேறி அருகிலிருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு வெளியேறியிருந்தார் என்றும், அதன் பின்னர் அவர் வீடு வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சூரியசக்தி மாநாட்டில் ஜனாதிபதி

உலக மக்களுக்கு பசுமை, தூய்மை மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான தீர்வுகளை கொண்டுவருவதற்கு இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பலத்தை சர்வதேச சூரியசக்தி மாநாடு எடுத்துக்காட்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.இன்று புதுடில்லியில் ஆரம்பமான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். 

இம்மாநாட்டின் தீர்மானங்கள் நடைமுறை சாத்தியமான கூட்டுறவை நோக்கிய இந்த கூட்டமைப்பிலுள்ள நாடுகளின் இணைந்த முயற்சிகளை எடுத்துக்காட்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, ஏனைய உலக நாடுகளும் இந்த கூட்டமைப்பில் இணைந்துகொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டார். 

உலக சனத்தொகை வளர்ச்சியுடன் சக்தி வளத்தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, சூரியசக்தியின் மூலம் இப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்றும் தெரிவித்தார். 

சக்தி வள பிரச்சினை இலங்கை மக்களும் உலகிலுள்ள பல்வேறு அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள மக்களும் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

சூரியசக்தி வளத் துறையில் இலங்கையின் முன்னெடுப்புகள் தொடர்பாக விளக்கிய ஜனாதிபதி, இலங்கையில் நாம் ‘சூரிய பல சங்ராமய’ ‘சூரியசக்தி வள போராட்டம்’ என்ற நிகழ்ச்சித் திட்டமொன்றை ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார். இத்திட்டத்தினூடாக 2025ஆம் ஆண்டாகின்றபோது 1000 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளுக்கு உதவும் வகையில் ஒரு மெகா வோட் முதல் 10 மெகா வோட் இயல்திறன்கொண்ட சூரியசக்தி முறைமைகளை அபிவிருத்திசெய்யும் செயன்முறையையும் இலங்கை முன்னெடுத்துவருகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் பாரிய சூரியசக்தி திட்டங்களுக்கு உதவியளித்து வருகின்றமைக்காக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்ததுடன், இது எமது நாட்டில் பல்வேறு பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள், அரசாங்க நிறுவனங்களுக்கு பயன்மிக்கதாகும் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முன்னெடுப்புகளை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவத்தை வழங்கிவரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இம்மாநாட்டில் பெரும் எண்ணிக்கையான அரச தலைவர்களும், அரசாங்க பிரதிநிதிகளும் பங்குபற்றுவதானது இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இக்கூட்டமைப்புக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இலங்கையின் முழுமையான அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி உலகத் தலைவர்களிடம் உறுதிப்படுத்தினார்.

like page

Social